வயதானவர்களை கண்டுபிடிக்க புதிய சாஃப்ட்வேர்… இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சோதனை முயற்சி.!

கிரிக்கெட் வீரர்களின் வயதை கணக்கிட போன் எக்ஸ்பர்ட் எனும் புதிய மென்பொருளை சோதனை முயற்சியாக பிசிசிஐ கொண்டுவர உள்ளது.   

இந்திய கிரிக்கெட் வாரியத்தால்  கிரிக்கெட் வீரர்களின் வயதை கண்டறிய முன்னர் TW3 முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களின் உண்மையான வயது கண்டறியப்படும்.

ஆனால், இந்த முறையில் ஒருமுறை பரிசோதனை செய்ய செலவு மட்டும் 2400 ரூபாய் ஆகும். மேலும் இதன் பரிசோதனை முடிவ வெளியே வர இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும்.

இதனை நிவர்த்தி செய்வதற்கு தற்போது ஓர் புதிய மென்பொருளை பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளது அதன் பெயர் போன் எக்ஸ்பெர்ட். இந்த மென்பொருள் மூலம் ஆகும் செலவு 288 ரூபாய் மட்டுமே.

இதனை தற்போது சோதனை முயற்சியாக பிசிசிஐ நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது அது வெற்றி பெற்றால் வரும் காலங்களில் போன் எக்ஸ்பர்ட் முறையை வைத்து கிரிக்கெட் வீரர்களின் வயது துல்லியமாக கணக்கிடப்படும் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment