பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞருக்கு நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை ..!

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட பிரவீன் என்ற இளைஞர் சென்னை அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிய  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த கடந்த 21ஆம் தேதி பைக் ரேஸில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர் பிரவீன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அதில், சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அடுத்த ஒரு மாதத்துக்கு தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்றவும், தனது பணி அனுபவம் குறித்து நாள்தோறும் அறிக்கையாக தயாரித்து மருத்துவமனை முதல்வரிடம் சமர்ப்பிக்கவும் ஒரு மாத கால பணி முடிந்ததும்  முதல்வர் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.