ஜன.1 முதல் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை – கூட்டுறவுத்துறை

நியாயவிலை கடைகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவு.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறையை அமல்படுத்த அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது, ஜனவரி 1 முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாநில அரசின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

20 கிலோ அரிசி வழங்கினால், அதில் மத்திய அரசு வழங்கும் 15 கிலோவுக்கு தனி ரசீதும், மாநில அரசு வழங்கும் 5 கிலோ அரிசிக்கு தனி ரசீதும் வழங்க வேண்டும்.  விதிமுறையை கடைபிடிக்காமல் விநியோகித்தால், அதற்கு உண்டான தொகையை சம்பந்தப்பட்ட அலுவலர்கலே செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment