ஜெய் ஷாக்கு புதிய பதவியா?- நாளை கூடுகிறது பிசிசிஐ-யின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்.!

பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில், ஐபிஎல் டி-20 தொடரில் அடுத்த ஆண்டில் 2 புதிய அணிகளைச் சேர்ப்பது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது, தேர்வுக் குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா நாளை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக பதவி ஏற்க உள்ளார். ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் தலைவராக பிரிஜேஸ் படேல் தொடருவார் என்று கூறப்படுகிறது. மேலும், பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருவதால் அவரிடம் முறையாக விளக்கம் கேட்கவுள்ளனர்.

குறிப்பாக, தற்போது 8 அணிகள் ஐபிஎல் தொடரில் இருக்கும் நிலையில் 2021-ம் ஆண்டில் நடக்கும் ஐபிஎல் தொடரில் 10 அணிகளாக உயர்த்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நாளை நடக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது. அதில், அதானி குழுமம் மற்றும் சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயிட்ன்ஸ்) குழுமம் ஆகிய இரு புதிய அணிகளும் ஐபிஎல் தொடரில் இணைய ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 2021-ஆம் ஆண்டுக்கு தான் 10 அணிகள் சேர்ப்பது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

2021-ம் ஆண்டில் இந்தியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடக்கயிருப்பதால், ஐசிசி அமைப்புக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரி பிசிசிஐ அமைப்பிடம் கோரி இருந்தது. அந்த அவகாசம் முடிய இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதால், இதுகுறித்தும் ஆலோசிக்கப்படும். நாளை கூட்டத்தில் பிசிசிஐ செயலாளரும் அமித் ஷா மகனுமான ஜெய் ஷா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. பின்னர் முக்கிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்