#CarAccident: ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் – பிசிசிஐ

கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிசிசிஐ அறிவிப்பு. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த ரிஷப் பந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரூர்க்கி நோக்கி காரை ஓட்டி செல்லும்போது ரிஷப் பந்த் கண் அசைந்ததால் விபத்து நடந்துள்ளது … Read more

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார குழுவின் தலைவராக ஜெய் ஷா நியமனம்!

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு, ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளை முடிவு செய்து, ஒட்டுமொத்த வருவாய்க் குழுவிலிருந்து உறுப்பு நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதைக் கவனிக்கிறது. இந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெறவுள்ள ஐசிசி வாரியக் … Read more

இந்தியா இதனை செய்தால் உலக கோப்பை தொடருக்கு இந்தியாவிற்கு வரமாட்டோம்.! முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பேச்சு!

அனைத்து நாடுகளும், பாகிஸ்தானில் வந்து விளையாடும் போது பிசிசிஐ க்கு என்ன பிரச்சனை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வர் கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானில் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்லுமா என்று பேசப்பட்டு வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா செல்லாது என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பொதுவான இடங்களில் நடந்தால் இந்தியா பங்கேற்கும் என்றும் பாகிஸ்தானில் நடந்தால் இந்தியா பங்கேற்காது என்றும்  ஜெய் … Read more

இவர்களின் ஓய்வூதியம் 100% உயர்வு – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அசத்தல் அறிவிப்பு!

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ),முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக,பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறுகையில்: “எங்கள் முன்னாள் அல்லது தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.பல ஆண்டுகளாக நடுவர்கள் அளித்த பங்களிப்பை BCCI மதிக்கிறது.அந்தவகையில்,அவர்களின் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது அதன் ஒரு படியாகும். அதன்படி,முன்னாள் கிரிக்கெட் … Read more

ஜெய் ஷாவின் பதவிக் காலம் 2024 -வரை நீட்டிப்பு..!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டத்தில் 2024-ம் ஆண்டு வரை ஏசிசி தலைவராக ஜெய் ஷா நீடிப்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் 2024 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஏசிசி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ட்வீட் செய்து கூறப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் ஐந்து … Read more

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமனம்!

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் தலைவர் நஸ்முல் ஹுசைனின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருந்து வருபவர், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன், ஜெய் ஷா. தற்பொழுது 24 உறுப்பு நாடுகளை கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹுசைனின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக … Read more

ஆஸ்திரேலிய மண்ணில் அபார வெற்றி: “இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் வழங்கப்படும்”- பிசிசிஐ!

ஆஸ்திரேலியாக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நேற்று நடந்த 4 ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கியது. அதில் 4 ரன்கள் மட்டும் அடித்த நிலையில், இன்று நடந்த இறுதி நாள் போட்டியில் 325 … Read more

ஜெய் ஷாக்கு புதிய பதவியா?- நாளை கூடுகிறது பிசிசிஐ-யின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்.!

பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில், ஐபிஎல் டி-20 தொடரில் அடுத்த ஆண்டில் 2 புதிய அணிகளைச் சேர்ப்பது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது, தேர்வுக் குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை … Read more