2022 அக்டோபருக்குள் தயாராகும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்..!

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 2022 அக்டோபருக்குள் தயாராக இருக்கும் எனவும், இதன் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரக்கூடிய திறன் இருக்கும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்க்கான செலவு ரூ.971 கோடி எனவும்  புதிய நாடாளுமன்றம் ஒரு முக்கோண வடிவத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளின் போது காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், இது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனி அலுவலகங்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

author avatar
murugan