#BREAKING : புதிய நாடாளுமன்ற கட்ட அனுமதி வழங்கப்பட்டது..!

புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் இரண்டு நீதிபதிகள் கட்டடப் பணிக்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர். புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி வழங்கியது … Read more

பிரதமருக்குத்தானே ,டேக் பண்ணிட்டா போச்சு – கமல்ஹாசன் பதில்

ட்விட்டில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்யவில்லை என்று கேள்வி எழுந்த நிலையில் ,கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் கட்டிடம் போதுமான வசதி மற்றும் வரும் காலங்களில் இடங்கள் அதிகரிப்பதால் புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில்  ரூ.971 கோடி செலவில் புதிய கட்டிடம் தேவையா என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. … Read more

1000 கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் பிரதமரே – கமல்ஹாசன்

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் கட்டிடம் போதுமான வசதி மற்றும் வரும் காலங்களில் இடங்கள் அதிகரிப்பதால் புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த … Read more

#BREAKING: நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்..!

டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்ற்றுள்ளனர். 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் ரத்தன் டாடா, மத்திய அமைச்சர் எச்.எஸ். பூரி, மாநிலங்களவை சபை தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் பல்வேறு மதத் … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வரும்10-ம் தேதி மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 10 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் விழாவை நடைபெறும் என அறிவித்தார். புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 75-வது  நிறைவடைந்ததும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் அமர்வும் தொடங்குவோம் என ஓம் பிர்லா தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்க்கான செலவு ரூ.971 கோடி எனவும் புதிய நாடாளுமன்றம் ஒரு முக்கோண … Read more

2022 அக்டோபருக்குள் தயாராகும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்..!

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 2022 அக்டோபருக்குள் தயாராக இருக்கும் எனவும், இதன் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரக்கூடிய திறன் இருக்கும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்க்கான செலவு ரூ.971 கோடி எனவும்  புதிய நாடாளுமன்றம் ஒரு முக்கோண வடிவத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளின் போது காற்று மற்றும் ஒலி … Read more