சிங்கப்பூரில் பரவும் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலையை ஏற்படுத்தும் – டெல்லி முதல்வர்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்பதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது . சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்பதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட  கொரோனாவின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இது மூன்றாவது அலையாக வரக்கூடும் என்றும் கூறுகிறார்கள். எனவே மத்திய அரசு சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் நடைமுறையில் உள்ள தடுப்பூசிகளுக்கு குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.