புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள், உலக முதலீட்டாளர் மாநாடு; பட்ஜெட்டில் அறிவிப்பு.!

தமிழக பட்ஜெட் 2023-24க்கான உரையில் நிதியமைச்சர், ரூ.410 கோடியில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அறிவிப்பு.

சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான மின்னணு வடிவ பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் ரூ.410 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதியதாக அமையவிருக்கும் சிப்காட் தொழிற்பூங்காக்களால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். அதிகளவில் தொழில் முதலீடுகளை தமிழ்நாடு கடந்த 2 ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தனது உரையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment