கோயில் சொத்துக்கள்… தேவாலயங்கள் பற்றிய முக்கிய அறிவிப்பு.! நிதியமைச்சர் தகவல்.!

கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும்,  தேவாலயங்கள் பழுதுபார்க்க நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.

தமிழக பட்ஜெட்  கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

பட்ஜெட் திட்டங்கள் :

இதில், மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம், காலை உணவு திட்டம் , சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம், மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் உதவி, பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு திட்டம், ராணுவ வீர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு என பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் நிதியமைச்சர் அறிவித்து வருகிறார்.

கோவில் சொத்துக்கள் :

சென்னையை தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார். அதேபோல, கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டது குறித்தும், தேவாலயங்கள் பற்றியும் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.

தேவாலயங்கள் சீரமைப்பு : 

அதில், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு கோவில் பகுதிகளில் 4,400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன எனவும், கிருஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க வழங்கப்படும் மானியமானது 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment