#NEETExam: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியாகியுள்ளது. அதன்படி, http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தியாவில் 2023-24ம் கல்வியாண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதில், நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ். ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 499 நகரங்களில் உள்ள வெவ்வேறு மையங்களில் மே 7 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 02:00 மணி முதல் மாலை 05:20 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது ஏற்கனவே என தெரிவிக்கப்பட்டிருந்தது.

NEET EXAM HALL TICKET
National Testing Agency
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்