இந்தாண்டு முதல் சித்த மருத்துவ படிப்பிற்கும் நீட் தேர்வு! – அமைச்சர் தகவல்!

இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கு தற்போது நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த பொது தேர்வு எழுதி அதன் மூலம் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும்.  இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கடுமையாக இருந்து வருகிறது.

இருப்பினும் இந்த நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் அங்காங்கே காணப்படுகிறது. இந்த நீட் தேர்வு முறை இது வரை சித்தா மருத்துவ படிப்பிற்கு இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு முதல்  சித்தா மருத்துவ படிப்பிற்கும் நீட் தேர்வு முறை கொண்டுவரப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment