காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள நயன்தாரா!

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக நெற்றிக்கண் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இப்படத்தை மிலிந் ராவ் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை அடுத்தது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படமாக்கப்பட உள்ளதாம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 17வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.