அமித்ஷாவை தொடர்ந்து நட்டா தமிழகம் வரத் திட்டம் ! தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

நவம்பர் 21-ஆம் தேதி அமித்ஷா தமிழ்நாடு வந்த நிலையில் ஜே.பி.நட்டா தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி தமிழகம் வந்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷா வந்தது  முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் அதிமுக – பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பு நிலவி வந்தது.இதனால் அதிமுக -பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் செய்திகள் உலாவந்தது. இதனிடையே அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி  வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு பின்பு ,உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வரும், துணை முதல்வரும் நேரில் சந்தித்தனர்.இந்த சந்திப்பில் தேர்தல் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது.அதிலும் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதிமுக தரப்பில் 25 தொகுதிகள் வரை கொடுப்பதாக உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியது.ஆனால் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.வருகின்ற டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதிகளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.நவம்பர் 21-ஆம் தேதி அமித்ஷா தமிழ்நாடு வந்த நிலையில் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார்.தமிழகம் வரும் அவர் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார் என்றும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல தெரிவிக்கப்பட்டுள்ளது.