நல்லகண்ணுவை சந்தித்த பேரறிவாளன்..! அற்புதம்மாளுக்கு அறிவுரை வழங்கிய நல்லகண்ணு…!

சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில், பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தனது விடுதலைக்காக உழைத்த தலைவர்களை பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து இருந்த நிலையில், தற்போது நல்லகண்ணு ஐயாவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில், பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது நல்லகண்ணு ஐயா அற்புதம்மாளிடம் உடல்நலத்தை கவனித்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here