தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல – அண்ணாமலை

திமுக வரலாற்றில் ஒரு தவறான முன் உதாரணத்தை எடுத்து வைத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் குற்றசாட்டு.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என குறிப்பிடவில்லை. நிரபராதிகளை விடுதலை செய்தது போல், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டாடி வருகிறார். உச்ச நீதிமன்றம் மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை பாஜக ஏற்கிறது. ஆனால், சரித்திரத்தை மறக்க கூடாது, நம் மண்ணில் நடந்ததையும் நாம் மறக்க கூடாது. ராஜீவ் காந்தி, அவருடன் சேர்ந்து மனித வெடிகுண்டில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இதில் குறிப்பாக 8 காவலர்கள் மற்றும் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் இஃபால், அவரது பிறந்தநாள் அன்றே இறந்துள்ளார் என தெரிவித்தார். எனவே, அப்போ அவர்களுக்கு நியாயம் நீதி இல்லையா என கேள்வி எழுப்பினார்.

பாஜகவின் நியாயம், நீதி என்பது குற்றவாளிகள் தான். உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் விடுதலை செய்யப்பட்டவர் கொண்டாடப்பட வேண்டியவர்கள் கிடையாது என குறிப்பிட்டார். தியாகிகள் போல் தமிழ்நாடு முழுவதும் எடுத்து சென்று ஒரு சாதனை செய்தது போல கொண்டாடுவதற்கு தமிழகத்தில் ஏராளமாக உள்ளது.

திமுக வரலாற்றில் ஒரு தவறான முன் உதாரணத்தை நேற்றில் இருந்து எடுத்து வைத்துள்ளது என தெரிவித்தார். கல்குவாரி உயிரிழப்பிற்கு திமுகவே காரணம். காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் உரிமையாளர் என்பதால் அரசின் ஒத்துழைப்புடன் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here