ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளி யார் என தெரியாது.! கணவரை சந்தித்த பின் நளினி பேட்டி.!

ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். – நளினி தகவல்.

 முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் சிறையில் இருந்து அண்மையில் வெளியான நளினி, திருச்சி முகாமில் இருக்கும் தனது கணவர் முருகனை இன்று சந்தித்து விட்டு வந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். உண்மையில் ராஜீவ் காந்தி இறந்த போது எங்கள் வீட்டில் யாரும் சாப்பிடக்கூட இல்லை. ‘ என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘ சாந்தன் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். அதே போல எனது கணவர் முருகன் தனது மகள் வசிக்கும் லண்டன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். ‘ என செய்தியாளர்களிடம் நளினி குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment