சிறுமி நரபலி - தந்தையின் 2வது மனைவி மர்ம மரணம்.!

மந்திரவாதி பேச்சை கேட்டு தனது மகளை நரபலி கொடுத்த தந்தையை கைது செய்த சம்பவம்

By balakaliyamoorthy | Published: Jun 02, 2020 05:19 PM

மந்திரவாதி பேச்சை கேட்டு தனது மகளை நரபலி கொடுத்த தந்தையை கைது செய்த சம்பவம் - தந்தையின் 2வது மனைவி மர்ம மரணம்.

புதுக்கோட்டை சிறுமி நரபலி விவகாரத்தில் கைதான பன்னீரின் 2வது மனைவியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னீரின் 2வது மனைவி மூக்காயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமி நரபலிக்கு வடுதாவயலை சேர்ந்த மூக்காயியும் உடந்தையாக இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, சிறுமியின் தந்தை பன்னீர்செல்வமும், உறவினர் குமார் என்பவரும் சேர்ந்து மூடநம்பிக்கையின் அடிப்படையில் மந்திரவாதி பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்தது விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரை கைது செய்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மந்திரவாதி பேச்சை கேட்டு கொல்லை செய்தது தொடர்பாக பெண் மந்திரவாதி ஒருவரிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, பன்னீரின் 2 வது மனைவியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc