ஐபிஎல் 2024: வெளுத்து வாங்கிய ரொமாரியோ.. டெல்லிக்கு 235 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை..!

ஐபிஎல் 2024: முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர்.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகிறது.  இந்த போட்டியானது  வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி  மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதலில் இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். அதன்படி ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 27 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 49 ரன்கள் எடுத்திருந்தபோது அக்சர் படேல் ஓவரில் போல்ட் ஆனார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் வந்த இரண்டாவது பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் 42 ரன்கள் எடுத்திருந்தபோது அக்சர் படேல் ஓவரில் அவரிடமே கேட்சைக்கொடுத்து வெளியேறினார்.  அடுத்து வந்த திலக் வர்மா நிலைத்து நிற்காமல் வெறும் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் ஹர்திக் பாண்டியா,  டிம் டேவிட் இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டுவந்தனர். இருப்பினும் நிதானமாக விளையாடி வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் எடுத்தபோது சிக்ஸர் அடிக்க முயன்றார். அப்போது பவுண்டரி லைனில் நின்ற ஜேக் மெக்குர்க்கிடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஆனால் மறுபுறம் இருந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 45*  ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். மறுபுறம் இருந்த ரொமாரியோ கடைசி ஓவரில் 4 சிக்ஸர் , 2 பவுண்டரி விளாசி மொத்தம் 10 பந்தில் 39* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டையும்,  கலீல் அகமது 1 விக்கெட்டையும் பறித்தனர்.

author avatar
murugan