சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.! தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன்.!

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.   

கடந்த மாதம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்துபோனது. இந்த திடீர் உயிரிழப்பு தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சிறுத்தை இறந்து கிடந்த நிலமானது தேனி எம்பி ரவீந்தரநாத்திற்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. இதனால் சிறுத்தை இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் உள்ள நில உரிமையாளர்கள் 2 பேர் என மொத்தமாக 3 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதில் ரவீந்திரநாத் மக்களவை உறுப்பினர் என்பதால் மக்களவை சபாநாயகரிடம் அவரை விசாரிக்க வனத்துறை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருந்தது.

இதன்படி, சிறுத்தை இறந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி ரவீந்திரநாத் எம்பி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரவிந்த்ரநாத் உட்பட 3 நில உரிமையாளர்களும் 2 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment