ஷாருக்கான் தனது மகளுடன் அந்த கவர்ச்சி பாடல் உள்ள பதான் படத்தை பார்க்க வேண்டும்.! ம.பி சபாநாயகர் விமர்சனம்.!

ஷாருக்கான் , பதான் படத்தை அவரது மகளுடன் பார்க்க வேண்டும் என ம.பி மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் கூறியுள்ளார். 

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தில் இருந்து அண்மையில் பேஷாரம் ரங் எனும் கவர்ச்சி பாடல் வெளியானது. அதில் நாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார்.

இந்த பாடலுக்கு பாஜகவினர் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த பாடல் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

அதே போல, மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் கூறுகையில், ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் அந்த பாடலை  பார்ப்பாரா.? பதான் திரைப்படத்தை அவரது மகளுடன் பார்க்கும்படி நான்  கேட்டுக்கொள்கிறேன். என அவர் கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment