#SRHvRR: மீண்டும் அணியில் மோரிஸ்.., ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு..!

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள்  துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஹைதராபாத் அணி வீரர்கள்:

விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர் ), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஜேசன் ராய், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, சித் கவுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டேவிட் வார்னருக்கு பதிலாக ஜேசன் ராய், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ்விற்கு பதிலாக ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், காயம் காரணமாக கலீல் அகமது நீக்கப்பட்டு சித் கவுல் அணியில் இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் அணி வீரர்கள்:

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் /கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கார்த்திக் தியாகி பதிலாக மோரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

author avatar
murugan