கொரோனா இரண்டாம் அலையில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு – மாநிலங்கள் வாரியாக பட்டியல் இதோ!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் இதுவரை 513 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த நெருக்கடிக் காலகட்டத்தில் கூட முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் இந்த கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இந்த இரண்டாம் அலையில் அதிக அளவில் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இது வரை கொரோனா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 613 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 103 மருத்துவர்களும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்திரபிரதேசத்தில் 41 மருத்துவர்களும், குஜராத்தில் 31 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 31 மருத்துவர்களும், ஆந்திர பிரதேசத்தில் 29 மருத்துவர்களும், தெலுங்கானாவில் 29 மருத்துவர்களும், மேற்குவங்கத்தில் 19 மருத்துவர்களும், ஜார்கண்டில் 29 மருத்துவர்களும், தமிழகத்தில் 18 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதனை தவிர்த்து அசாமில் 6, சதீஷ்கர் 3, ஹரியானா 2, கோவா 2, ஜம்மு காஷ்மீர் 3 கர்நாடகா 8, கேரளா 4, மத்திய பிரதேசம் 13, மகாராஷ்டிரா 15, ஒடிசா 16, பாண்டிச்சேரி 1, பஞ்சாப் 1, திரிபுரா 2, உத்தரகாண்ட் 2 மேலும் ஒரு மாநிலத்தில் 1 மருத்துவர் என மொத்தம் 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதோ உயிரிழந்த மருத்துவர்களின் பட்டியல் அட்டவணை,

author avatar
Rebekal