நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்களில் பணப்பறிமாற்றம்..!

நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிதித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்து வருகிறார். அதில், நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய மையங்கள் திறக்கப்படும். வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களை வங்கியுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் கிராமப்புற மக்கள், மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள்.  நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்களில் பணப்பரிமாற்றம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
Castro Murugan