#Breaking : ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.! 

பாரத ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.   

பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மூலம் கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில் 3,570 கிமீ கடந்து காஷ்மீரில் முடிக்க உள்ளார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி.

இந்த யாத்திரை இன்று கன்னியாகுமரியில் இன்று தொடங்க உள்ளதை அடுத்து, இந்த யாத்திரையை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி வந்திருந்தார்.

கன்னியாகுமரி வந்திறங்கிய ராகுல் காந்தியை கட்டியணைத்து வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் காந்தி மண்டபத்தில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் என அரசியல் தலைவர்கள் பலர் இருந்தனர். பின்னர் தேசிய கொடியை தமிழக முதல்வர், ராகுல் காந்திக்கு வழங்கி ஒற்றுமை பாதயாத்திரியை தொடங்கி வைத்தார்.

தற்போது, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து தனது பாரத் ஜோடோ யாத்ரா எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்  ராகுல் காந்தி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment