ஆட்சியரை அலேக்காக தூக்கிச் சென்ற மலைக்கிராம மக்கள்.!

ஊரை பார்க்க வந்த ஆட்சியரை பல்லக்கில் மலைக்கிராம மக்கள்  தோளில் தூக்கி சென்றுள்ளனர்.

கிராமத்தை பார்வை இட வந்த ஆட்சியரை கிராம மக்கள் பல்லக்கில் தங்களது தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள் காரணம் என்னவென்றால்  மிசோரமில் கனமழை கொட்டி தீர்த்து விட்டது இதனால் அந்த மாநிலத்தில் பல இடங்கள் வெள்ள காடாக காட்சியளிக்கிறது.

இதனால் அந்த கிராமங்களை எல்லாம் ஆட்சியர் பார்வையிட்டு வருகிறார்.அப்படி திசோபி கிராமத்தை பார்வையிட சென்றார் கனமழையினால் அங்கு போடப்பட்ட சாலைகள் எல்லாம் மண் சரிவால் பெறும் சேதம் அடைந்து விட்டது.இதனை உடனே கவனம் கொண்டு பார்வையிடவே அம்மாவட்ட ஆட்சியர்  டி.எம்.புபேஷ் சவுத்ரி அங்கு விரைந்தார்.

அவரை கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து அவரை ஆட்டம் ,பாட்டத்துடன் வரவேற்றனர் பின்னர் தங்கள் வைத்திருந்த துணிகளை கொண்டு ஒரு பல்லக்கை தயார் செய்து அதில் ஆட்சியரை அமர வைத்து  அவரை தங்களது தோளில் சுமந்து கிராமத்திற்கு சென்றனர்.

ஏன் இந்த பரவசம் என்றால் அந்த கிராமத்திற்கு வந்த முதல் உயர் அதிகாரி இவர் மேலும் அந்த கிராமத்திற்கு ஒரு உயர் பதவியில் உள்ள ஒருவர் வருவது இதுவே முதன்முறையாகும்.

author avatar
kavitha