MIWvsRCBW : அட்டகாசமான பேட்டிங்…மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த ஆண்டு அறிமுகமான மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 4வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 அவர்களின் ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்திருந்தது.

156 ரன்கள் என்ற இலக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 4.6 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்த நிலையில் யாஸ்திகா பாட்டியா ஆட்டமிழந்தார். தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் ஹெய்லி மேத்யூஸ் மற்றும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.

14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 77 ரன்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் 55 ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஹெய்லி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment