திராவிடம் ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்கும் இடம்.! அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.!

ஆன்மீகத்திற்கு எதிரானவர் கலைஞர் என சிலர் உருவாக்கபடுத்த பார்க்கின்றனர். திராவிடம் என்பது ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்கும் இடம். – அமைச்சர் எ.வ.வேலு. 

சேலத்தில் இந்தி எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். அப்போது பேசிய எ.வ.வேலு, ‘ மத்திய அரசு பல்வேறு வகைகளில் இந்தியை திணிக்க பார்க்கிறது. அதன் ஒரு பகுதி தான் மத்திய அரசு, ஐஐடி பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை பயிற்று மொழியாக மாற்ற முயற்சிப்பது. ‘ என குறிப்பிட்டார்.

மேலும், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி அல்ல. அப்படி தலைவர் கலைஞர் ஆன்மீகத்திற்கு எதிரானவர் என்றால் அத்தனை குடமுழுக்கு விழாக்களை நடத்தி இருக்க மாட்டார். திருவாரூர் தேர் இழுத்திருக்க முடியாது. இத்தனையும் கலைஞர் செய்தார்.

 முற்காலத்தில் தமிழை வளர்த்தது பக்தி. பிற்காலத்தில் தமிழை வளர்த்தது திராவிடம். ஹிந்தி வந்தால் தேவாரம், திருவாசம் எல்லாம் பாட முடியுமா.? என கேள்வி எழுப்பினார். ஆன்மீகத்திற்கு எதிரானவர் கலைஞர் என சிலர் உருவாக்கபடுத்த பார்க்கின்றனர். திராவிடம் என்பது ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்கும் இடம். என்று குறிப்பிட்டார் அமைச்சர் எ.வ.வேலு.

மேலும் பேசுகையில், ‘ பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தில், குஜராத்தி மொழியை இரண்டாம் மொழியாக மாறிவிட்டு, இந்தியை முதன்மை மொழியாக மாற்றி ஏமாந்துவிட்டார்கள். அதே போல எங்களையும் ஏமாற்ற பார்க்கிறீர்கள். வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கே வேலை இல்லாமல் பிழைப்புக்காக தமிழகம் வருகின்றனர்.’ என தனது விமர்சனத்தையும் முன் வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment