கேரளாவில் ‘மாஸ்’ காட்டும் பினராயி விஜயன் .. பெரும்பாலான இடங்களில் இடதுசாரி முன்னிலை!

கேரளாவில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியான நிலையில், அம்மாநிலத்தில் மீண்டும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி தொடரும் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 71 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கலாம். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கேரளாவில் இடதுசாரி கூட்டணிகள் அதிகளவிலான இடங்களில் முன்னணி வகிக்கின்றனர்.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியானது. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா உள்ளிட்டோர் தொடர்ந்து முன்னணி வகிக்கும் நிலையில், மீண்டும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி தொடரும் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அந்தவகையில், தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் உள்ளார். அதனையடுத்து மட்டன்னூர் தொகுதியில் அமைச்சர் கே.கே.ஷைலஜா, மேலும் அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி, மொத்தமாக 93 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

LDF (இடதுசாரி கூட்டணி): 93

UDF (காங்கிரஸ் கூட்டணி): 44

BJP: 03

மற்றவை: 0