கோவை கார் வெடிப்பு.! என்ஐஏ விசாரணை பற்றி விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு.! 

கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். 

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை இதுவரை தமிழக காவல் துறை செய்து வந்து தற்போது அந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக தமிழக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த விசாரணை குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,  ‘ கோவை கார் வெடி விபத்து நான்கு நாள் கழித்து என்ஐஏ வழக்குப்பதிவு செய்த்து குறித்து விளக்கம் அளித்தார்

இதற்கு முன்னர், டெல்லியில் குண்டு வெடிப்பு 2021 டிசம்பர் 23 இல் நடந்தது.  ஆனால், 13-1-2022இல் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  மேற்கு வங்கத்திலும் 2022 ஜனவரி 4 இல் நடந்த சம்பவதிற்கு ஜனவரி 27, 2022இல் தான் என்ஐ ஏ வழக்கு பதிவு செய்தனர். என குறிப்பிட்டு கோவை கார் வெடிப்பு குறித்து 4 நாட்கள் கழித்து என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர் என தெரிவித்தார்.

அதுவரையில் நடைபெற்ற காவல்துறை விசாரணை முழுமையாக என்ஐஏவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 4 நாட்கள் விசாரணையிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் இருந்துள்ளார். தமிழகத்தில் தீவிரவாதத்திற்கு அனுமதியில்லை அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என என்ஐஏ அதிகாரிகள் பாராட்டியுள்ளார். தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் இணைந்து தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். என குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில், ‘ 2019ஆம் ஆண்டு என்ஐஏ இறந்த ஜமேஷ் முபின்-ஐ விசாரித்துள்ளது. ஆனால், ஏன் அப்போது விடுவித்தனர் என தெரியவில்லை. என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment