ஸ்ட்ரைக் நடந்தாலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, அகவிலைப்படி உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதனால், ஜனவரி 9ம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல் போக்குவரத்துத்துறை தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் வழக்கு -விரைந்து விசாரிக்க மேல்முறையீடு..!

இருப்பினும், நல்ல முடிவு எட்டப்படவில்லை என்றும் நல்ல முடிவு வரும் வரை வேலைநிறுத்த போராட்டம் முடிவு தொடரும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் போக்குவரத்து தொழிற்சங்களின் கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. 

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நிதித்துறை செயலாளருடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தொழிற்சங்க போராட்டம் நடந்தாலும், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். மேலும், மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்