அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 12வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 12வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொளி வாயிலாக மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரின் நீதிமன்ற காவலை டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

டந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது, செந்தி பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு, நீதிமன்ற காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதிலிருந்து செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த இரு மனுக்களை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.  அதுவும், தள்ளுபடி செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கு மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே, சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல பாதிப்பு காரணமாக தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.  இந்த சமயத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியிஜ் நீதிமன்ற காவலை 12ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்