தடுப்பூசி இல்லாததால் ராஜினாமா செய்த அமைச்சர்…!

பிரேசில் வெளியுறவு துறை அமைச்சர் எர்னஸ்டோ அராஜூவா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள்  மேற்கொண்டு வருகிற நிலையில், பல நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரேசிலை பொறுத்தவரையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 3,000 எட்டியுள்ளது. இதற்கிடையில், அங்கு போதுமான கொரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தால், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் எர்னஸ்டோ அராஜூவா  குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றசாட்டை ஏற்றுக் கொண்ட அவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.