அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு ! விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

  • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மீது வழக்கு தொடரப்பட்டது.
  • வழக்கின் விசாரணை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை தல்லாக்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது  வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், 2011 முதல் 2013 -ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை  விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் வழக்கில் முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது.இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜியின் வருமானம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்த தகவலில், குறைந்த சதவீத அளவிலேயே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து அதிகரித்துள்ளது. 750 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். 

Recent Posts

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…

9 mins ago

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

34 mins ago

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…

38 mins ago

ரோஹித்திடம் பேசியதை நினைத்து மனம் நெகிழ்ந்த கம்பிர் ! என்ன விஷயம்னு தெரியுமா ?

Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…

48 mins ago

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

1 hour ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

3 hours ago