Connect with us

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா.? அமைச்சர் முத்துசாமி பதில்.!

Minister Muthusamy talks about Prohibition of alcohol in Tamil Nadu

தமிழ்நாடு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா.? அமைச்சர் முத்துசாமி பதில்.!

சென்னை: கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தனர்.

இன்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் கீழ் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா என கேட்டுக்கொண்டார். அதற்கு அத்துறை அமைச்சர் முத்துசாமி பதில் கூறுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த அரசுக்கு விருப்பம் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பூரண மதுவிலக்கை கொண்டு வரும் நோக்கில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்தார். அடுத்து, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களில் இருந்து மது தமிழகத்திற்கு வருவதையும் தடுக்க வேண்டும் என கூறினார்.

முன்னதாக, இன்று கள்ளச்சாராயத்தை முழுதாக ஒழிக்கும் நோக்கில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு 10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டணை விதிக்கும் சட்டத்திருத்தத்தை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து இருந்தார்.

Continue Reading

More in தமிழ்நாடு

To Top