அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு அற்ற சென்னை மாநகராட்சி.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி.!  

இந்த வருடம் 90 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லை. அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லாத சென்னையாக மாறும் . – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வடிகால் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சுமார் 7,100 கோடி ருபாய் செலவில் வெள்ள நீர் தடுப்பு பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்த பட்டு வருகிறது என தெரிவித்தார்.

கடந்த 6, 7 மாதங்களாக இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி எல்லைக்குள் 2 ஆண்டுக்குள் இதனை முடிக்க திட்டமிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

சென்னை மாநகரராட்சியில் 220கிமீக்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிட்டு, இதுவரையில் 157 கிமீ வடிகால் பணிகள் முடிந்துள்ளது.
நகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலை துறை என மூன்றும் சேர்ந்து செயல்பட்டு வருவதால் இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவுமில்லை.

வேளச்சேரி வெள்ளச்சேரி என அழைக்கும் நிலைமை தற்போது மாறியுள்ளது. செம்மஞ்சேரி பகுதிகளில் கடந்த ஆண்டு 166 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. ஆனால், இந்த வருடம் செம்மஞ்சேரி பகுதிகளில் கால்வாய் வழியாகவே மழைநீர் வெளியேறி உள்ளது.  இந்த வருடம் 90 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லை. அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லாத சென்னையாக மாறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment