3 மாவட்டங்களுக்கு பதக்கங்கள்;20 புதிய மகளிர் காவல் நிலையங்கள் திறப்பு – முதல்வர் ஸ்டாலின் அசத்தல்!

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய முதல் 3 மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதக்கங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதன்படி,முதல் இடம் பிடித்த கோவை மாவட்டத்துக்கு தங்கப்பதக்கமும், இரண்டாவது இடம் பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வெள்ளிப் பதக்கமும்,3-வது இடம் பிடித்த கரூர் மாவட்டத்துக்கு வெண்கலப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார்.

Leave a Comment