#BREAKING: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு!

பொதுக்குழுவுக்கு தடைகோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 தலைமை பொறுப்பும் தவறானது. கட்சியில் பொதுச்செயலாளர் பதவி மட்டும் தான் அதிமுகவின் உண்மையான தலைமையாக இருக்க வேண்டும். இதனால் அவர்கள் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் கிடையாது என்றும் பொதுக்குழு குறித்து அவைத்தலைவர் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் எனவும் திண்டுக்கல்லை சேர்த்த சூரிய மூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதிமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதன்பின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை நிராகரிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம். ஜூன் 23ல் பொதுக்குழு நடப்பதால், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனுதாரர் சூரியமூர்த்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 22க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் மனு குறித்து மனுதாரர் சூரியமூர்த்தி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment