#IPL2021: இன்று சென்னை-டெல்லி அணிகள் மோதல்.. பலம், பலவீனம் பற்றி ஒரு பார்வை!

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று நடைபெறவுள்ள இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மொதவுள்ளது.

ஐபிஎல் 2021:

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றிபெற்றது. அதனைதொடர்ந்து இன்று நடைபெறவுள்ள இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ்:

கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட், முதல்முறையாக கேப்டனாக களமிறங்கவுள்ளார்.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை டெல்லி அணி கைப்பற்றாத நிலையில், இம்முறை கோப்பையுடன் வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறது. கொரோனா விதிகள் காரணமாக டெல்லி அணியில் ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் டெல்லி அணிக்கு பந்து வீச்சில் சற்று பின்னடைவு ஏற்படும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் மோசமான ஆட்டம் காரணமாக பிளே ஆப்ஸ் சுற்றுக்கு கூட நுழையாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றம் அளித்தது.

இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று, கோப்பையை வெல்லும் நோக்குடன் தீவிரமாக விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னை அணியை பொறுத்தளவில், இங்கிடி தனிமையில் உள்ளார். மேலும், ஜோஷ் ஹேசில்வுட் தன்னை போட்டிகளில் இருந்து விலக்கி கொண்டது, சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளெசிஸின் ஆட்டம் பேட்டிங்கில் சாதமாக அமையும் என்றும், ஷார்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹரின் சிறப்பான பந்துவீச்சிசால் சென்னை அணி மேலும் வலுவானதாக இருக்கும்.

நேருக்கு நேர்:

சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 8 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது.

எதிர்பார்க்கப்படும் XI:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா / அம்பதி ராயுடு, தோனி, மொயீன் அலி, சாம் கரண், ஜடேஜா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித் / ரஹானே, ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹெட்மியர், கிறிஸ் வோக்ஸ் / டாம் கரண், ரவிச்சந்திரன் அஸ்வின், பிரவீன் துபே / அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.