கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு மாதர் சங்கம் போராட்டம்.! டிஜிபி அலுவலகம் முற்றுகை.!

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் காவல்துறையினர் விரைவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இன்று சென்னை மயிலாப்பூர் டிஜிபு அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர் இதனால் அந்த பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அது முதல்வர் செல்லும் சாலை என்பதாலும், பதற்றமான சூழல் உருவானது. பின்னர் போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் கண்டறிந்து அவர்கள் மீது போக்சோ சட்டம் பதிய வேண்டும்.  காவல்துறை இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment