#Breaking: “கோவிலில் திருமணம்.. 10 பேருக்கு மட்டுமே அனுமதி”- அறநிலையத்துறை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாடுகளில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் கலந்துகொள்ள 10 பேருக்கு மட்டுமே அனுமதி.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 6,000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கோவிலில் நடைபெறும் திருமண விழாவில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது. மேலும், கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும், ஒதுக்கீடு செய்யப்படும் நேரத்தில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். திருமண விழாக்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.