மாமன்னன் கடைசி படம்…கமல் படத்திலிருந்து விலகல்…? அமைச்சர் உதயநிதி எடுத்த அதிரடி…!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில், தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். அமைச்சராக பதவியேற்ற அவருக்கு ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” இனி படங்களில் நடிக்கமாட்டேன் என்ற அதிர்ச்சியான தகவலை கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம்  தயாரிப்பில் நான் நடிக்கவிருந்த திரைபடத்திலிருந்து விலகிவிட்டேன் எனவும் தற்போது நடித்து வரும் “மாமன்னன்” படம்தான் நான் நடிக்கும் கடைசி படம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்-ரீ ரிலீசான பாபா வெற்றியா..? தோல்வியா..? சோகத்தில் ரஜினி.!

இந்த தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது என்றே கூறலாம். ஆனால், உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட, தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் படங்களை தயாரித்தும், அதனை வாங்கி தமிழக்தில் வெளியீடுவார் என கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment