#Breaking: காங்கிரஸின் தலைவராக பதவியேற்றுக்கொண்டார் மல்லிகார்ஜுனே கார்கே

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி  நடைபெற்று முடிந்த நிலையில், 19-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே  7,897 வாக்குகள் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.இந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்று வரும் பதவியேற்பு நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக
மல்லிகார்ஜுனே கார்கே பதவியேற்றுக்கொண்டார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment