பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த மலையாள நடிகர்!

நடிகர் ஜெயராம் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் அதிகமாக மலையாள படங்களில் தான் நடித்துள்ளார். சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், மலையாள நடிகரான ஜெயராம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜெயராம் அளித்த பேட்டி ஒன்றில், அவர் இப்படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார்.

மேலும், இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கார்த்தி, ஜெயம்ரவி, கீர்த்திசுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.