தெலுங்கு சூப்பர் ஸ்டாரை பிரமிக்க வைத்த நம்ம சூப்பர் ஸ்டாரின் பேட்ட!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று பிரமாண்டமாக வெளியாகி  இருந்த திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்துடன் தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பாரத்துள்ளார். அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் மிகுந்த சந்தோஷத்தோடு பதிவிட்டுள்ளார். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்னையும் சேர்த்து அனைவரையும் இப்படம் சந்தோஷபடுத்தியது. இந்த படத்தை எடுத்த இயக்குனரையும், ஒளிப்பதிவாளர் திருவையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இதேபோல பல திரைபிரபலங்களும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

DINASUVADU