அமெரிக்கா_வில் அவசர நிலை…டொனால்ட் டிரம்ப் விருப்பம்…!!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லைப் பகுதியில் சுவர் கட்டுவேன் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு தெரிவித்தார்.இந்நிலையில் இந்த சுவர் கட்டுவதற்க்காக் சுமார்  39 ஆயிரத்து 693 கோடி ரூபாயை ஒதுக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கேட்டார்.ஆனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுகுறித்து பேசிய டொனால்ட் டிரம்ப் , அமெரிக்காவில் அவசரநிலையை வேகமாக செய்ய வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.