அருமையானபோட்டி..!கொரோனா இல்லாத கிராமமாக மாற்றினால் ரூ.50 லட்சம் பரிசு..!

கிராமப்புற பகுதிகளை “கொரோனா இல்லாத கிராமமாக” மாற்றினால், முதல் பரிசாக ‘ரூ.50 லட்சம் பரிசுத் தொகை’ வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலையானது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்பானது 60 ஆயிரத்தை எட்டியுள்ளது.மேலும்,தினசரி கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது,மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புற பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி வேகமாக பரவி வருகிறது.ஏனெனில்,கிராமங்களில் போதுமான சுகாதார கட்டமைப்பு வசதிகள் குறைவு என்பதால்,கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனால்,கிராமப்புற பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில்,கிராமப்புற பகுதிகளை, “கொரோனா இல்லாத கிராமமாக” மாற்றினால், ‘ரூ.50 லட்சம் பரிசுத் தொகை’ வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.அதாவது, கொரோனா ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் இந்த போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக கையாளும் கிராமத்திற்கு முதல் பரிசாக ரூ.50 லட்சம், 2 வது பரிசாக ரூ.25 லட்சம், 3 வது பரிசாக ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும்.மேலும்,ஒவ்வொரு வருவாய் மண்டலத்துக்கு உள்பட்ட மூன்று கிராமங்களில் இந்த போட்டி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து,எந்த கிராமம் சிறப்பாக செயல்பட்டது என்ற முடிவை தேர்வு செய்ய ஒரு கமிட்டி உருவாக்கப்படும் என அம்மாநில கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் தெரிவித்துள்ளார்.