கரூர் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கரூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுகவை சேர்ந்த திருவிக என்பவர் கடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் திமுக முறைகேடாக செயல்பட்டதாகவும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடபட்டு இருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறுகையில், இந்த ஊராட்சிமன்ற துணை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் 7 வாக்குகளும், அதிமுகவுக்கு 4 வாக்குகளும்  பதிவாகி உள்ளதால், மனுதாரரின் வாக்கினால் இந்த தேர்தல் முடிவு மாறப்போவதில்லை என்பதால் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என அறிவித்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment