37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

‘Love You Tanya’ – சிறுமிக்கு பதிலளித்து முதல்வர் ட்வீட்..!

தனது ட்விட்டர் பக்கத்தில், லவ் யூ டான்யா என்று ட்வீட் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் ஸ்டீபன்-சௌபாக்யா தம்பதியின் மகள் சிறுமி டானியா, இவருக்கு வயது 9. இவர் அரிய வகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கோளுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி அவருக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த வருடம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது சிறுமி நலமுடன் உள்ள நிலையில், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கும் சென்று வருகிறார்.

இந்த நிலையில், சிறுமி டான்யா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த பிறந்த நாளில் தனது பெற்றோர் மற்றும் தனது சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்ததுடன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஐ லவ் யூ ஸ்டாலின் அங்கிள் என கூறி நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு லவ் யூ டான்யா என்று ட்வீட் செய்துள்ளார்.