புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும்.! எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.!

புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும்.! எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.!

New Parliment building

புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வரும் மே 28ஆம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட உள்ளது. 2020ஆம் ஆண்டு இந்த பணிகள் துவங்கப்பட்டு, 64,500 சதுர அடியில், 970 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இதற்கு எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடளுமன்ற கட்டடத்தை நாட்டின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும். தேர்தல் காரங்களுக்காக மட்டுமே குறிப்பிட்ட சமூக மக்களை பாஜக பயன்படுத்துகிறது என்றும் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவில்லை எனவும், இந்த முடிவு ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மதுரை எம்.பி ரவிக்குமார் டிவிட்டர் பக்கத்தில் அழைப்பிதழை பகிர்ந்து குடியரசு தலைவர் பெயர் கூட பதியப்படாவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், நாட்டின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் தான் நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் விழாவை புறக்கணிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube